Skip to main content

Posts

Showing posts from 2013

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே 1.பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும் வான்தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 2.சூரிய சந்திரரோடே சகல நட்சத்திர கூட்டமும் ஆகாயப் பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 3.வானாதி வானங்கள் யாவும் அதின் கீழ் உள்ள ஆகாயமும் பூமியில் காண்கின்ற யாவும் கர்த்தா உம்மைப் போற்றுமே 4.காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுமே 5.வால வயதுள்ளானோரும் மிகும் வயதால் முதிர்ந்தோர்களும் பாலகர் தம் வாயினாலும் பாடி உம்மைப் போற்றுவாரே 6.பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஒயா துதி பாடுதே

வானம் பூமியோ பராபரன்

வானம் பூமியோ பராபரன் மானிடன் ஆனாரோ என்ன இது ஞானவான்களே நிதானவான்களே 1.பொன்னகரத்தாளும் உன்னதமே நீளும் பொறுமைக் கிருபாசனத்துரை பூபதி வந்ததே அதிசயம் - ஆ என்ன இது 2.மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி - ஆ என்ன இது 3.வேறே பேரல்ல சுரர் விண்ணவர் யாருமல்லர் மாறில்லாத ஈறில்லாத வல்லமை தேவனே புல்லில் கிடக்கிறார் - ஆ என்ன இது 4.சீயோன் மாதே இனி கணம் தரியாதே மாயமென்னவோ உனக்குச் சொல்லவோ வந்தவர் மணவாளனல்லவோ - ஆ என்ன இது

அனாதி சிநேகம்

அனாதி சிநேகம் அனாதி சிநேகம் அனாதி சிநேகம் எங்க இயேசுவின் சிநேகம் 1.பரத்தை விட்டு இறங்கி வந்த சிநேகம் பரலோக மகிமை துறந்து வந்த சிநேகம் எல்லா சிநேகத்திலும் அது மேலான சிநேகம் 2.மறுதலித்த பேதுருவை மனந்திருந்த செய்த சிநேகம் காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல் சிநேகிதனே என்றழைத்த சிநேகம் அது மேலான சிநேகம் எங்க இயேசுவின் சிநேகம் 3.கண்ணிழந்த பெலனிழந்த சிம்சோனையும் நினைத்த சிநேகம் நினிவேக்கு போகாமல் திசை மாறி ஓடிய யோனாவை பயன்படுத்திய சிநேகம் அது மேலான சிநேகம் எங்க இயேசுவின் சிநேகம்

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் 1.காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும் கனாவைப் போலேயும் ஒழியும் வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும் மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன் 2.பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் பரம பாதையையும் தொடர்ந்தோம் வலிய தீமையை வென்றோம், நலியும் ஆசையைக் கொன்றோம் வஞ்சகர் பகைக்கும் தப்பி நின்றோம் கலி என்றதெல்லாம் விட்டோம் கர்த்தாவின் மீட்பைக் கண்டோம் காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம் ஓய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன்

சோராதே என் மனமே

சோராதே என் மனமே சோர்ந்து போகாதே என் உள்ளமே மாறாத கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார் பாராதவர் போல தான் - உன்னை வடியாதே கண்ணீர் இன்று மனம் மடிவடையதே நின்று இடிமேகம் அகன்றிடும் விடிவெள்ளி ஜொலித்திடும் நடுப்பகல் கதிர் வீசிடும்>