Skip to main content

வானம் பூமியோ பராபரன்

வானம் பூமியோ பராபரன்
மானிடன் ஆனாரோ என்ன இது
ஞானவான்களே நிதானவான்களே

1.பொன்னகரத்தாளும் உன்னதமே நீளும்
பொறுமைக் கிருபாசனத்துரை
பூபதி வந்ததே அதிசயம் - ஆ என்ன இது

2.மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி
நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி - ஆ என்ன இது

3.வேறே பேரல்ல சுரர் விண்ணவர் யாருமல்லர்
மாறில்லாத ஈறில்லாத
வல்லமை தேவனே புல்லில் கிடக்கிறார் - ஆ என்ன இது

4.சீயோன் மாதே இனி கணம் தரியாதே
மாயமென்னவோ உனக்குச் சொல்லவோ
வந்தவர் மணவாளனல்லவோ - ஆ என்ன இது

Comments

Popular posts from this blog

நம்பி வந்தேன் மேசியா நான்

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே - திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பி வந்தேனே. தம்பிரான் ஒருவனே தஞ்சமே தருவனே - வரு தவீது குமார குரு பரமனுவேலே நம்பி வந்தேனே. நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் - நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பி வந்தேனே. நாதனே கிருபை கூர் வேதனே சிறுமை தீர் - அதி நலம் மிகும உனதிரு திருவடி அருளே நம்பி வந்தேனே. பாவியில் பாவியே கோவியில் கோவியே - கண பரிவுடன் அருள் புரி அகல விடாதே நம்பி வந்தேனே. ஆதி ஓலோலமே பாதுகா காலமே - உன தடிமைகள் படு துயர் மெத்த நம்பி வந்தேனே.

இனியும் உம்மை கேட்பேன்

இனியும் உம்மை கேட்பேன் நீர் சொல்வதை நான் செய்வேன் என் கூட பேசுங்கப் பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா- நீர் பேசாவிட்டா நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன் என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா -இனியும் நீர் பேசாவிட்டா நான் தளர்ந்துபோவே தள்ளாடிப்போவேன்- என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா -இனியும்

இதய துடிப்பை புரிந்து கொள்ள இதயம் இல்லையே

இதய துடிப்பை புரிந்து கொள்ள இதயம் இல்லையே மனதின் உணர்வை உணர்ந்து கொள்ள மனிதர் இல்லையே உலக ஓடையில் வாழ்க்கை படகு ஓட மறுக்குதே ஓட்டைப் படகை ஒட்டிட எனக்கு ஒருவர் இல்லையே எனக்காய் வாழ எனக்காய் மரிக்க எனக்கு யார் உண்டு எனக்காய் மரித்து உயிர்த்து எழுந்த இயேசு தான் உண்டு வாழ்க்கை மேடையில் ஊமை வேடம் எனக்கு பொருந்துமே பாலை வனத்தில் கானல் நீரும் காணவில்லையே எனது மனது வீணை மீட்க வித்துவான் இல்லையே மனது வீட்டை மடக்க செய்ய மனதும் இல்லையே கண்ணின் மணி போல் ஏற்று கொள்ள இமைகள் இல்லையே பார்வை நாடகம் எனது வாழ்வில் வெளிச்சம் இல்லையே உயர வானில் பறந்து செல்ல சிறகு இல்லையே பூமி தன்னில் வாசம் செய்ய மனதும் இல்லையே