Skip to main content

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை


கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

1.கெத்செமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே - கல்வாரி

2.சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்க்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அன்பே உம் அன்பு பெரிதே - கல்வாரி

3.என்னையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரை மட்டும் தாழ்த்துகிறேன்
தந்து விட்டேன் அன்பு கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் - கல்வாரி

Comments

Popular posts from this blog

நம்பி வந்தேன் மேசியா நான்

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே - திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பி வந்தேனே. தம்பிரான் ஒருவனே தஞ்சமே தருவனே - வரு தவீது குமார குரு பரமனுவேலே நம்பி வந்தேனே. நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் - நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பி வந்தேனே. நாதனே கிருபை கூர் வேதனே சிறுமை தீர் - அதி நலம் மிகும உனதிரு திருவடி அருளே நம்பி வந்தேனே. பாவியில் பாவியே கோவியில் கோவியே - கண பரிவுடன் அருள் புரி அகல விடாதே நம்பி வந்தேனே. ஆதி ஓலோலமே பாதுகா காலமே - உன தடிமைகள் படு துயர் மெத்த நம்பி வந்தேனே.

இனியும் உம்மை கேட்பேன்

இனியும் உம்மை கேட்பேன் நீர் சொல்வதை நான் செய்வேன் என் கூட பேசுங்கப் பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா- நீர் பேசாவிட்டா நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன் என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா -இனியும் நீர் பேசாவிட்டா நான் தளர்ந்துபோவே தள்ளாடிப்போவேன்- என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா -இனியும்

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்

என் நிலைமை நன்றாய் அறிந்தவர் பாவி என்னை அழைத்தவர் மீறின பின்பும் வெறுக்காதவர் உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை நேசித்தவரில் இது போல் அன்பை இன்னும் காணவில்லை விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை உம் அன்பை மட்டும் என்னவென்று சொல்ல தெரியவில்லை தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே உம் அன்பில் ஒன்றே உண்மை உண்டென்று கண்டேன்