Skip to main content

Posts

Showing posts from 2014

இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே இயேசு அழைக்கிறார் 1.எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார் என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் 2.கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார் கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும் கருத்துடன் உன்னைக் காத்திடவே 3.சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார் அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால் தாமதமின்றி நீ வந்திடுவாய் 4.சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம் யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே கிருபையாய் அன்பை அளித்திடவே

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே 1.கெத்செமனே பூங்காவினில் கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே - கல்வாரி 2.சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போதும் அவர்க்காய் வேண்டினீரே அன்போடு அவர்களை கண்டீரன்றோ அன்பே உம் அன்பு பெரிதே - கல்வாரி 3.என்னையும் உம்மைப் போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ என் தலை தரை மட்டும் தாழ்த்துகிறேன் தந்து விட்டேன் அன்பு கரங்களிலே ஏற்று என்றும் நடத்தும் - கல்வாரி

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே 1.என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர், என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்; விண்ணுல குயர்ந்தோர் , உன்னதஞ்சிறந்தோர், மித்திரனே சுகபத்திர மருளும் - என் மீட்பர் 2.பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ, பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர், சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்; சஞ்சலமினியேன் ? நெஞ்சமே, மகிழாய் - என் மீட்பர் 3.ஆசி செய்திடுவார், அருள்மிக அளிப்பார், அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்; மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்; மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் - என் மீட்பர் 4.கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார், கடைசிமட்டுங் கைவிடா திருப்பார்; பாவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார், பரம பதவியினுள் என்றனை எடுப்பார் - என் மீட்பர் 5.போனது போகட்டும், புவிவசை பேசட்டும், பொல்லான் அம்புக ளெய்திடட்டும், ஆனது ஆகட்டும், அருள்மழை பெய்திடும், அன்புமிகும் பேரின்ப மெனக்கருள் - என் மீட்பர்