Skip to main content

Posts

Showing posts with the label ஆறுதல்

நீர் எனக்கு போதும்

நீர் எனக்கு போதும் (4) எந்நாளும் எப்போதும் நீரே என் சொந்தம் இயேசுவே நீர் எனக்கு போதும் (2) 1. என் தாயும் தந்தையும் நீர் தானே தாங்கிடும் துருகமும் நீர் தானே – (2) சுற்றமும் நட்பும் நீர் தானே சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2) 2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே ஆறுதல் தேறுதல் நீர் தானே – (2) ஞானமும் அறிவும் நீர் தானே என் சுகம் பெலனும் நீர் தானே – (2)

இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே இயேசு அழைக்கிறார் 1.எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார் என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் 2.கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார் கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும் கருத்துடன் உன்னைக் காத்திடவே 3.சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார் அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால் தாமதமின்றி நீ வந்திடுவாய் 4.சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம் யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே கிருபையாய் அன்பை அளித்திடவே

திருப்பாதம் சேராமல் இருப்பேனோ

தேவனின் பாதமண்டை சேராமல், அவரை தேடாமல் இருக்க கூடுமோ என பொருள்படும் பாடல் இது. தேவனின் இயல்புகளை எடுத்துரைக்கும் வரிகளும், அவர் இல்லாமல் புவியில் நமக்கு வேறு அடைக்கலம் இல்லை எனப் பொருள்படும் வரிகளும் அருமையானவை. நமக்கு ஆறுதலும் தேறுதலும் அளித்து மகிமையில் சேர்த்திடுபவர் இறைவன் என்னும் வரிகள் நம்பிக்கை ஊட்டுபவை. திருப்பாதம் சேராமல் இருப்பேனோ - நான் தெய்வத்தை தேடாமல் பிழைப்பேனோ 1.அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன் உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன் - திருப்பாதம் 2.ஆவியும் ஆன்மாவும் ஆண்டவர் பங்கே பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே - திருப்பாதம் 3.ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன் தூறும் மகிமையில் சேர்த்திடும் தூயன் - திருப்பாதம் 4.உலையில் மெழுகுபோல் உருகுதென் நெஞ்சம் அலையாகும் திருவடி வணங்கினேன் தஞ்சம் - திருப்பாதம்

எந்தன் இயேசையா

இயேசு கிறிஸ்து நம் மேல் கொண்ட அளவற்ற அன்பை குறித்தானப் பாடல் தான் இது. சிலுவையில் இரத்தம் சிந்தி நம் பாவங்கள் எல்லாம் நீங்க செய்து நம் ஜீவனாய் இருக்கும் ஆண்டவரை துதிக்காமல் இருப்பதெப்படி? உலகம் நம்மை வெறுத்து ஆகாதவன் என்று தள்ளினப் போதும் நம்மை அணைத்து சேர்த்து கொண்டவரல்லவா அவர்?