Skip to main content

Posts

Showing posts from May, 2012

என் மீட்பர் இரத்தம் சிந்தினார்

என் மீட்பர் எனக்காய் இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தார். அவர் காட்டும் பாதை ஜீவ ஒளியும், அவரின் வார்த்தை ஜீவ ஊற்றுமாம். அவர் எனக்காய் ஜீவனை கொடுத்து என்றும் என்னோடு இருக்கிறவர். அவரை நாடுவதும் போற்றுவதுமே; என் வாழ்வின் நோக்கம். என் மீட்பர் இரத்தம் சிந்தினார் நான் பரிசுத்தனானேன் அவர் எனக்காய் மரித்தெழுந்தார் நான் மறுரூபமானேன் 1.அவர் பாதை ஜீவ ஒளியாம் என் இதயம் தேடுதே அவர் வார்த்தை ஜீவ ஊற்றாம் என் இதயம் நாடுதே 2.அவர் எனக்காய் உயிர் கொடுத்தார் என் உள்ளம் போற்றுதே அவர் என்னோடு என்றும் இருப்பார் என் உள்ளம் வாழ்த்துதே

திருப்பாதம் சேராமல் இருப்பேனோ

தேவனின் பாதமண்டை சேராமல், அவரை தேடாமல் இருக்க கூடுமோ என பொருள்படும் பாடல் இது. தேவனின் இயல்புகளை எடுத்துரைக்கும் வரிகளும், அவர் இல்லாமல் புவியில் நமக்கு வேறு அடைக்கலம் இல்லை எனப் பொருள்படும் வரிகளும் அருமையானவை. நமக்கு ஆறுதலும் தேறுதலும் அளித்து மகிமையில் சேர்த்திடுபவர் இறைவன் என்னும் வரிகள் நம்பிக்கை ஊட்டுபவை. திருப்பாதம் சேராமல் இருப்பேனோ - நான் தெய்வத்தை தேடாமல் பிழைப்பேனோ 1.அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன் உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன் - திருப்பாதம் 2.ஆவியும் ஆன்மாவும் ஆண்டவர் பங்கே பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே - திருப்பாதம் 3.ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன் தூறும் மகிமையில் சேர்த்திடும் தூயன் - திருப்பாதம் 4.உலையில் மெழுகுபோல் உருகுதென் நெஞ்சம் அலையாகும் திருவடி வணங்கினேன் தஞ்சம் - திருப்பாதம்