Skip to main content

Posts

Showing posts from January, 2019

அன்பின் நாயகனே

அன்பின் நாயகனே ஆறுதலின் ஊற்றே என்னை அழைத்தவர் நீர் அல்லவா உம்மை நேசிக்கிறேன் 1. அலைகள் படகை ஆழ்த்தும்போது காற்று பலமாய் அடிக்கும்போது படகு முழுகும் நிலை வரும்போது நம்பிக்கை எல்லாம் இழக்கும்போது 'பயப்படாதே நான் உன்னுடனே மகனே நான் உந்தன் அருகில் தானே  எந்தன் காவல் உனக்கல்லவா' என்ற அன்பை நான் மறப்பேனோ  2. எந்தன் வாழ்வின் தூயவனே வாழ்க்கை எல்லாம் உமக்கு தானே உம்மை விட்டு எங்கு செல்வேன் உந்தன் பின்னால் வருவேனே உந்தன் சித்தமே என் வாழ்வில் உந்தன் அழைப்பே என் மனதில் என்னையே என்றும் உமக்கென தந்த அன்பை நீர் மறப்பீரோ

கர்த்தனே எம் துணையானீர்

கர்த்தனே எம் துணையானீர் நித்தமும் எம் நிழலானீர் கர்த்தனே எம் துணையானீர் 1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும் கர்த்தனே அடைக்கல மாயினார் மனுமக்களில் இவர் போலுண்டோ விண் உலகிலும் இவர் சிறந்தவர் 2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார் ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் ராஜா உம் அன்பு எனைக் கண்டது உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை 3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார் நம்பினோரும் எதிராக வந்திட்டார் கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார் ஐயா உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை 4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும் ராஜனே உமைப் பாடக்கூடுமோ ஜீவனே உமக்களிக்கின்றேனே உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை