Skip to main content

Posts

கண்டேனென் கண்குளிர

கண்டேனென் கண்குளிர -கர்த்தனைஇன்று கண்டேனென் கண்குளிர கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக்

பெத்தலேம் சத்திர முன்னணையில் உற்றோருக் குயிர்தரு உண்மையாம் என்இரட்சகனை
தேவாதி தேவனை தேவ சேனை ஓயாது ஸ்தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனை
பாவேந்தர் தேடிவரும் பக்தர் பரனை  ஆவேந்தர் அடிதொழும் அன்பனை என்இன்பனை நான்
மண்ணோர் இருள் போக்கும் மா மணியை விண்ணோரும் வேண்டிநிற்கும்விண்மணியைக் கண்மணியை
அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை கண்டோர்கள் கலிதீர்க்கும் காரணனை பூரணனை
Recent posts

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

என் இன்ப துன்ப நேரம்

என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்

1.நான் நம்பிடும் நேசர் இயேசுவே
நான் என்றென்றும் நம்பிடுவேன்
தேவனே ராஜனே
தேற்றி என்னைத் தாங்கிடுவார்

2.இவரே நல்ல நேசர் இயேசுவே
என்றும் தாங்கி நடத்துவார்
தீமைகள் சேதங்கள்
நேராது என்னைக் காத்திடுவார்

3.பார் போற்றும் இராஜன் புவியில்
நான் வென்றிட செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன்

கவர்ச்சி நாயகனே

கவர்ச்சி நாயகனே
கண்களில் நிறைந்தவரே
கரம் பிடித்தவரே
கைவிடா கன்மலையே

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்

1.என்னை இழுத்துக்கொள்ளும்
ஓடி வந்திடுவேன்
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூறுவேன்

2.திராட்சை இரசம் பார்க்கிலும்
இனிமையானவரே
ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே

3.இடக்கையால் தாங்குகிறீர்
வலக்கையால் தழுவுகிறீர்
எனக்கு உரியவரே
இதயம் ஆள்பவரே

4.உம் மீது கொண்ட நேசம்
அக்கினி ஜுவாலையன்றோ
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்க முடியாதையா

எப்படி நான் மறப்பேன்

உம் அன்பு எத்தனை பெரிதையா
இயேசையா உம் அன்பு பெரிதையா

எப்படி நான் மறப்பேன்
எப்படி நான் மறப்பேன்
எப்படி நான் மறப்பேன்
உம் அன்பை

1.பாவத்தின் பாரத்தால்
சோர்ந்து நான் போகையில்
பாசமாய் வந்தென்னை
இரத்தத்தால் மீட்டீர்

2.தனிமையில் கண்ணீரில்
கலங்கி நான் நிற்க்கையில்
வலக்கரம் கொண்டென்னை
மார்பில் அணைத்தீர்

3.துரோகி நான் உம்மையே
பரிகாசம் செய்தேனே
நேசமாய் வந்தென்னை
சேர்த்து கொண்டீரே

ஏசுவையே துதி செய்

ஏசுவையே துதி செய், நீ மனமே
ஏசுவையே துதி செய்

1.மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

2.அந்தரவான் தரையுந்தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்

3.எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க

ஆதி திரு வார்த்தை

ஆதி திரு வார்த்தை திவ்விய
அற்புத பாலனாகப் பிறந்தார்
ஆதந்தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட
ஆதிரையோரை யீடேற்றிட

மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து
மரியக் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார் ரஞ்சிதனார்

தாம் தாம் தன்னர வன்னர
தீம் தீம் தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

1.ஆதாம் ஓதி ஏவினர்
ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத் தாளுகை செங்கோல்
ஈசாய் வங்கிஷத் தானுதித்தார்

2.பூலோகப் பாவ விமோசனர்
பூரணக் கிருபையின் வாசனர்
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார்

3.அல்லேலூயா! சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீக்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்