Skip to main content

Posts

Showing posts with the label சோதனை

சோர்ந்து போகாதே மனமே

சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே கண்டுனை அழைத்த தேவன் கைவிடுவாரோ 1.வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு ஊக்கமான ஆவி உன்னைத் தாங்க மன்றாடு 2.துன்பங்கள் தொல்லைகள் உன்னைச் சூழ்ந்து கொண்டாலும் அன்பர் உன்னைத் தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ 3.சோதனைகளை ஜெயிப்பேன் பாக்கியவானல்லோ ஜீவகிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம் – சோர்ந்து

ஆதாரம் நீர் தான் ஐயா

இவ்வுலகில் நம்மை நம் பெற்றோரே நேசிக்காவிடிலும், நமக்கு துணையாய் இருப்பதாய் வாக்களித்தவர்கள் கூட நம்மை கைவிட்டாலும், சோதனையும் வேதனையும் நம்மை துக்கத்தில் ஆழ்த்தினாலும், நமக்கு எக்காலத்திலும் அடைக்கலமான, தேவன் ஒருவர் உண்டு. இந்த பொல்லாத உலகில் அவரே நமக்கு ஆதாரம் என்னும் பொருள் கொண்ட பாடல் இது. ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே ஆதாரம் நீர் தான் ஐயா சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் 1.மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் மற்றோர்க்கு பற்றேதையா எளியன் மேல் மற்றோர்க்கு பற்றேதையா எளியனுக்கு -ஆதாரம் 2.நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர் நட்டாற்றில் விட்டாரையா தனியனை நட்டாற்றில் விட்டாரையா தனியனுக்கு -ஆதாரம் 3.கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே வற்றா கிருபை நதியே என்பதியே வற்றா கிருபை நதியே என்பதியே -ஆதாரம் 4.சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு -ஆதாரம்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு

எந்த சூழ்நிலையில் நாம் இருந்தாலும் ஆண்டவர் நம்மை மீட்க வல்லவர் என்னும் பொருள் கொண்ட பாடல் இது. சோதனை வரும் நேரத்தில் பரத்திலிருந்து ஜெயம் நம் செவிதனில் ஒலிக்கும் என்னும் வரி துன்ப காலத்தில் நம்மை பலப்படுத்துவதாக உள்ளது. என்ன வந்தாலும் என் மீட்பரை நம்புவேன், யார் கைவிட்டாலும் அவரை நான் பின்பற்றுவேன் என்னும் பொருள் படும் வரிகள் நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.