Skip to main content

Posts

Showing posts from 2012

இதய துடிப்பை புரிந்து கொள்ள இதயம் இல்லையே

இதய துடிப்பை புரிந்து கொள்ள இதயம் இல்லையே மனதின் உணர்வை உணர்ந்து கொள்ள மனிதர் இல்லையே உலக ஓடையில் வாழ்க்கை படகு ஓட மறுக்குதே ஓட்டைப் படகை ஒட்டிட எனக்கு ஒருவர் இல்லையே எனக்காய் வாழ எனக்காய் மரிக்க எனக்கு யார் உண்டு எனக்காய் மரித்து உயிர்த்து எழுந்த இயேசு தான் உண்டு வாழ்க்கை மேடையில் ஊமை வேடம் எனக்கு பொருந்துமே பாலை வனத்தில் கானல் நீரும் காணவில்லையே எனது மனது வீணை மீட்க வித்துவான் இல்லையே மனது வீட்டை மடக்க செய்ய மனதும் இல்லையே கண்ணின் மணி போல் ஏற்று கொள்ள இமைகள் இல்லையே பார்வை நாடகம் எனது வாழ்வில் வெளிச்சம் இல்லையே உயர வானில் பறந்து செல்ல சிறகு இல்லையே பூமி தன்னில் வாசம் செய்ய மனதும் இல்லையே

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம் 1.அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன் கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிர தாபன் 2.மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார் நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மா பரிசுத்தனார் 3.திருவான் உலகரசாய் வளர் தேவ சொரூபானார் ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் 4.அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன் எபிரேயர்கள் குளம் தாவீதென் அரசற் கோர் குமாரன் 5.சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் 6.விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன் பண் ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன்

ஆதாரம் நீர் தான் ஐயா

இவ்வுலகில் நம்மை நம் பெற்றோரே நேசிக்காவிடிலும், நமக்கு துணையாய் இருப்பதாய் வாக்களித்தவர்கள் கூட நம்மை கைவிட்டாலும், சோதனையும் வேதனையும் நம்மை துக்கத்தில் ஆழ்த்தினாலும், நமக்கு எக்காலத்திலும் அடைக்கலமான, தேவன் ஒருவர் உண்டு. இந்த பொல்லாத உலகில் அவரே நமக்கு ஆதாரம் என்னும் பொருள் கொண்ட பாடல் இது. ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே ஆதாரம் நீர் தான் ஐயா சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் 1.மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் மற்றோர்க்கு பற்றேதையா எளியன் மேல் மற்றோர்க்கு பற்றேதையா எளியனுக்கு -ஆதாரம் 2.நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர் நட்டாற்றில் விட்டாரையா தனியனை நட்டாற்றில் விட்டாரையா தனியனுக்கு -ஆதாரம் 3.கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே வற்றா கிருபை நதியே என்பதியே வற்றா கிருபை நதியே என்பதியே -ஆதாரம் 4.சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு -ஆதாரம்

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே

யோபுவின் வாழ்க்கையில் தேவன் செய்த நன்மைகளை மையமாக கொண்ட பாடல் இது. தேவன் முடிவெடுத்தால் அதை மாற்ற யாரால் கூடும். அவர் எனக்கென்று முன்குறித்துள்ள யாவற்றையும் நிறைவேற்றுவார். நம்மை தேவன் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கும் நாம் எம்மாத்திரம்? ஆனாலும் அவர் நம்மை காலைதோறும் நோக்கி பார்த்து நிமிடந்தோரும் விசாரிக்கிறாரே? அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே நீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா 1.நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும் எனக்கென முன்குறித்த எதையுமே எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம் 2.நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர் நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம் 3.என்னைப் புடமிட்டால் நான் பொன்னாக துலங்கிடுவேன் நான் போகும் பாதைகளை அறிந்தவரே உந்தன் சொல்லை உணவு போல காத்துக் கொண்டேன் உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்

என் மீட்பர் இரத்தம் சிந்தினார்

என் மீட்பர் எனக்காய் இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தார். அவர் காட்டும் பாதை ஜீவ ஒளியும், அவரின் வார்த்தை ஜீவ ஊற்றுமாம். அவர் எனக்காய் ஜீவனை கொடுத்து என்றும் என்னோடு இருக்கிறவர். அவரை நாடுவதும் போற்றுவதுமே; என் வாழ்வின் நோக்கம். என் மீட்பர் இரத்தம் சிந்தினார் நான் பரிசுத்தனானேன் அவர் எனக்காய் மரித்தெழுந்தார் நான் மறுரூபமானேன் 1.அவர் பாதை ஜீவ ஒளியாம் என் இதயம் தேடுதே அவர் வார்த்தை ஜீவ ஊற்றாம் என் இதயம் நாடுதே 2.அவர் எனக்காய் உயிர் கொடுத்தார் என் உள்ளம் போற்றுதே அவர் என்னோடு என்றும் இருப்பார் என் உள்ளம் வாழ்த்துதே

திருப்பாதம் சேராமல் இருப்பேனோ

தேவனின் பாதமண்டை சேராமல், அவரை தேடாமல் இருக்க கூடுமோ என பொருள்படும் பாடல் இது. தேவனின் இயல்புகளை எடுத்துரைக்கும் வரிகளும், அவர் இல்லாமல் புவியில் நமக்கு வேறு அடைக்கலம் இல்லை எனப் பொருள்படும் வரிகளும் அருமையானவை. நமக்கு ஆறுதலும் தேறுதலும் அளித்து மகிமையில் சேர்த்திடுபவர் இறைவன் என்னும் வரிகள் நம்பிக்கை ஊட்டுபவை. திருப்பாதம் சேராமல் இருப்பேனோ - நான் தெய்வத்தை தேடாமல் பிழைப்பேனோ 1.அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன் உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன் - திருப்பாதம் 2.ஆவியும் ஆன்மாவும் ஆண்டவர் பங்கே பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே - திருப்பாதம் 3.ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன் தூறும் மகிமையில் சேர்த்திடும் தூயன் - திருப்பாதம் 4.உலையில் மெழுகுபோல் உருகுதென் நெஞ்சம் அலையாகும் திருவடி வணங்கினேன் தஞ்சம் - திருப்பாதம்

மறவாதே மனமே தேவ சுதனை

தேவகுமாரன் இயேசுவை ஒருபொழுதும் மறந்து விடாதே என்று நாம் நம் மனதோடு சொல்லிக் கொள்வது போல் இப்பாடல் அமைந்துள்ளது. பாவியாகிய என்னைத் தேடி இப்பூமிக்கு வந்து நீதிமானாய் மாற்றின தேவகுமாரனை நான் மறந்து விடுவேனோ? தீமைகள் நீக்கி ஆண்டு முழுவதும் என்னை காத்து வழிநடத்திய ஆண்டவரை நான் எப்படி மறப்பேன்? வருடங்கள் பல கடந்திடினும் அவர் இரக்கம் மட்டும் மாறாதபோது நான் அவரை மறக்கலாகுமோ? மறவாதே மனமே தேவ சுதனை மறவாதே மனமே ஒருபொழுதும் 1.திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை - மறவாதே 2.நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அளித்திவ் வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும் - மறவாதே 3.வருஷம் வருஷம் தோறும் மாறாத் தமதிரக்கம் பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை - மறவாதே

இறைவா உம் அருள் காண செய்யும்

இயேசுவானவர் இந்த உலகத்தில் மனிதனாய் வாழ்ந்தப் பொழுது செய்த அநேக அற்புதங்களில் சிலவற்றை இந்த பாடல் எடுத்துரைக்கிறது. அவர் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பியதையும், குஷ்டரோகியை குணப்படுத்தியதையும் இந்த அழகான பாடல் வரிகள் நினைப்பூட்டி நம்மையும் நம் விசுவாசத்தில் உறுதிப் படுத்துகிறது.

எந்தன் இயேசையா

இயேசு கிறிஸ்து நம் மேல் கொண்ட அளவற்ற அன்பை குறித்தானப் பாடல் தான் இது. சிலுவையில் இரத்தம் சிந்தி நம் பாவங்கள் எல்லாம் நீங்க செய்து நம் ஜீவனாய் இருக்கும் ஆண்டவரை துதிக்காமல் இருப்பதெப்படி? உலகம் நம்மை வெறுத்து ஆகாதவன் என்று தள்ளினப் போதும் நம்மை அணைத்து சேர்த்து கொண்டவரல்லவா அவர்?

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு

எந்த சூழ்நிலையில் நாம் இருந்தாலும் ஆண்டவர் நம்மை மீட்க வல்லவர் என்னும் பொருள் கொண்ட பாடல் இது. சோதனை வரும் நேரத்தில் பரத்திலிருந்து ஜெயம் நம் செவிதனில் ஒலிக்கும் என்னும் வரி துன்ப காலத்தில் நம்மை பலப்படுத்துவதாக உள்ளது. என்ன வந்தாலும் என் மீட்பரை நம்புவேன், யார் கைவிட்டாலும் அவரை நான் பின்பற்றுவேன் என்னும் பொருள் படும் வரிகள் நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.