Skip to main content

Posts

Showing posts with the label பராபரன்

வானம் பூமியோ பராபரன்

வானம் பூமியோ பராபரன் மானிடன் ஆனாரோ என்ன இது ஞானவான்களே நிதானவான்களே 1.பொன்னகரத்தாளும் உன்னதமே நீளும் பொறுமைக் கிருபாசனத்துரை பூபதி வந்ததே அதிசயம் - ஆ என்ன இது 2.மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி - ஆ என்ன இது 3.வேறே பேரல்ல சுரர் விண்ணவர் யாருமல்லர் மாறில்லாத ஈறில்லாத வல்லமை தேவனே புல்லில் கிடக்கிறார் - ஆ என்ன இது 4.சீயோன் மாதே இனி கணம் தரியாதே மாயமென்னவோ உனக்குச் சொல்லவோ வந்தவர் மணவாளனல்லவோ - ஆ என்ன இது