Skip to main content

Posts

Showing posts from 2018

உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 2. ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 3. எல்லா நாமத்திலும் மேலானவர் முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2) துதிகனம் மகிமைக்கு பாத்திரரே தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2

நீர் எனக்கு போதும்

நீர் எனக்கு போதும் (4) எந்நாளும் எப்போதும் நீரே என் சொந்தம் இயேசுவே நீர் எனக்கு போதும் (2) 1. என் தாயும் தந்தையும் நீர் தானே தாங்கிடும் துருகமும் நீர் தானே – (2) சுற்றமும் நட்பும் நீர் தானே சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2) 2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே ஆறுதல் தேறுதல் நீர் தானே – (2) ஞானமும் அறிவும் நீர் தானே என் சுகம் பெலனும் நீர் தானே – (2)

என்னில் என்ன கண்டீர்

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப்பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் – என்னில் 1. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் – என்னில் 2. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே – என்னில்

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்

என் நிலைமை நன்றாய் அறிந்தவர் பாவி என்னை அழைத்தவர் மீறின பின்பும் வெறுக்காதவர் உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை நேசித்தவரில் இது போல் அன்பை இன்னும் காணவில்லை விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை உம் அன்பை மட்டும் என்னவென்று சொல்ல தெரியவில்லை தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே உம் அன்பில் ஒன்றே உண்மை உண்டென்று கண்டேன்

நீங்க மட்டும் இல்லாதிருந்தால்

நீங்க மட்டும் இல்லாதிருந்தால் என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால் மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் இயேசய்யா உம் அன்பு போதுமே என் நேசரே உம் கிருபை போதுமே 1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா அக்கினியில் நடந்த போது – (கடும்) எனை மீட்டது உம் கிருபையப்பா 2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா விக்கினங்கள் சூழ்ந்த போது – (மரண) எனை மீட்டது உம் கிருபையப்பா 3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா வழிதப்பி அலைந்த போது – (உந்தன்) மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 3. தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா