Skip to main content

Posts

Showing posts from September, 2012

ஆதாரம் நீர் தான் ஐயா

இவ்வுலகில் நம்மை நம் பெற்றோரே நேசிக்காவிடிலும், நமக்கு துணையாய் இருப்பதாய் வாக்களித்தவர்கள் கூட நம்மை கைவிட்டாலும், சோதனையும் வேதனையும் நம்மை துக்கத்தில் ஆழ்த்தினாலும், நமக்கு எக்காலத்திலும் அடைக்கலமான, தேவன் ஒருவர் உண்டு. இந்த பொல்லாத உலகில் அவரே நமக்கு ஆதாரம் என்னும் பொருள் கொண்ட பாடல் இது. ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே ஆதாரம் நீர் தான் ஐயா சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் 1.மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் மற்றோர்க்கு பற்றேதையா எளியன் மேல் மற்றோர்க்கு பற்றேதையா எளியனுக்கு -ஆதாரம் 2.நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர் நட்டாற்றில் விட்டாரையா தனியனை நட்டாற்றில் விட்டாரையா தனியனுக்கு -ஆதாரம் 3.கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே வற்றா கிருபை நதியே என்பதியே வற்றா கிருபை நதியே என்பதியே -ஆதாரம் 4.சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு -ஆதாரம்

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே

யோபுவின் வாழ்க்கையில் தேவன் செய்த நன்மைகளை மையமாக கொண்ட பாடல் இது. தேவன் முடிவெடுத்தால் அதை மாற்ற யாரால் கூடும். அவர் எனக்கென்று முன்குறித்துள்ள யாவற்றையும் நிறைவேற்றுவார். நம்மை தேவன் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கும் நாம் எம்மாத்திரம்? ஆனாலும் அவர் நம்மை காலைதோறும் நோக்கி பார்த்து நிமிடந்தோரும் விசாரிக்கிறாரே? அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே நீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா 1.நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும் எனக்கென முன்குறித்த எதையுமே எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம் 2.நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர் நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம் 3.என்னைப் புடமிட்டால் நான் பொன்னாக துலங்கிடுவேன் நான் போகும் பாதைகளை அறிந்தவரே உந்தன் சொல்லை உணவு போல காத்துக் கொண்டேன் உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்