Skip to main content

Posts

Showing posts from 2017

கண்டேனென் கண்குளிர

கண்டேனென் கண்குளிர -கர்த்தனை இன்று கண்டேனென் கண்குளிர கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் 1. பெத்தலேம் சத்திர முன்னணையில் உற்றோருக் குயிர்தரு உண்மையாம் என்இரட்சகனை 2. தேவாதி தேவனை தேவ சேனை ஓயாது ஸ்தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனை 3. பாவேந்தர் தேடிவரும் பக்தர் பரனை ஆவேந்தர் அடிதொழும் அன்பனை என்இன்பனை நான் 4. மண்ணோர் இருள் போக்கும் மா மணியை விண்ணோரும் வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியை 5. அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை கண்டோர்கள் கலிதீர்க்கும் காரணனை பூரணனை

என் இன்ப துன்ப நேரம்

என் இன்ப துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 1.நான் நம்பிடும் நேசர் இயேசுவே நான் என்றென்றும் நம்பிடுவேன் தேவனே ராஜனே தேற்றி என்னைத் தாங்கிடுவார் 2.இவரே நல்ல நேசர் இயேசுவே என்றும் தாங்கி நடத்துவார் தீமைகள் சேதங்கள் நேராது என்னைக் காத்திடுவார் 3.பார் போற்றும் இராஜன் புவியில் நான் வென்றிட செய்திடுவார் மேகத்தில் தோன்றுவார் அவரைப் போல மாறிடுவேன்

கவர்ச்சி நாயகனே

கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரே கரம் பிடித்தவரே கைவிடா கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாளெல்லாம் உமக்கே ஸ்தோத்திரம் 1.என்னை இழுத்துக்கொள்ளும் ஓடி வந்திடுவேன் அறைக்குள் அழைத்துச் செல்லும் அன்பில் களிகூறுவேன் 2.திராட்சை இரசம் பார்க்கிலும் இனிமையானவரே ஊற்றுண்ட பரிமளமே உலகெல்லாம் உம் மணமே 3.இடக்கையால் தாங்குகிறீர் வலக்கையால் தழுவுகிறீர் எனக்கு உரியவரே இதயம் ஆள்பவரே 4.உம் மீது கொண்ட நேசம் அக்கினி ஜுவாலையன்றோ தண்ணீரும் வெள்ளங்களும் தணிக்க முடியாதையா