Skip to main content

Posts

Showing posts from September, 2025

ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன்

ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் எதற்காக பிடித்தாரோ அதை நான் பிடித்துக்கொள்ள பின்னானவை மறந்தேன் மறந்தேன் நான் கண்முன்னே என் இயேசு தான் பரமன் அழைத்தாரே  அந்த பந்தயப் பொருளுக்காய் இலக்கை நோக்கி ஓடுகிறேன் எதற்காய் அழைத்தாரோ அதை நான் செய்து முடிக்க கர்த்தராம் கிறிஸ்து இயேசு ராஜாவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாமே பயனற்றவை  நஷ்டம் குப்பையென தூக்கி நான் எறிந்து விட்டேன்  எதற்காய் அழைத்தாரோ அதை நான் செய்து முடிக்க

எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்

எல்லா நாமத்திலும் நீரே மேலானவர் எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முடங்கிடுமே எல்லா நாவுகளும் இயேசுவே கர்த்தர் என்று அறிக்கை செய்திடுமே உம்மை ஆராதித்திடுமே பரிசுத்தரே பரிசுத்தரே நீர் ஒருவரே பரிசுத்தரே பாத்திரரே பாத்திரரே எல்லா மகிமைக்கும் பாத்திரரே உம் நாமம் உயர்த்திடுவோம் உம்மையே ஆராதிப்போம் ஆராதிப்போம்-3 உம் நாமத்தை உயர்த்திடுவோம்-3 ஆராதிப்போம் தொழுதிடுவோம் பணிந்திடுவோம் வாழ்த்திடுவோம் உம் நாமத்தை