Skip to main content

மறவாதே மனமே தேவ சுதனை

தேவகுமாரன் இயேசுவை ஒருபொழுதும் மறந்து விடாதே என்று நாம் நம் மனதோடு சொல்லிக் கொள்வது போல் இப்பாடல் அமைந்துள்ளது. பாவியாகிய என்னைத் தேடி இப்பூமிக்கு வந்து நீதிமானாய் மாற்றின தேவகுமாரனை நான் மறந்து விடுவேனோ? தீமைகள் நீக்கி ஆண்டு முழுவதும் என்னை காத்து வழிநடத்திய ஆண்டவரை நான் எப்படி மறப்பேன்? வருடங்கள் பல கடந்திடினும் அவர் இரக்கம் மட்டும் மாறாதபோது நான் அவரை மறக்கலாகுமோ?

மறவாதே மனமே தேவ சுதனை
மறவாதே மனமே ஒருபொழுதும்

1.திறமதாக உனைத்
தேடிப் புவியில் வந்து
அறமதாகச் செய்த
ஆதி சுதன் தயவை - மறவாதே

2.நீண்ட தீமை யாவும்
நீக்கிச் சுகம் அளித்திவ்
வாண்டு முழுதும் காத்த
ஆண்டவனை எந்நாளும் - மறவாதே

3.வருஷம் வருஷம் தோறும்
மாறாத் தமதிரக்கம்
பெருகப் பெருகச் செய்யும்
பிதாவின் அனுக்ரகத்தை - மறவாதே

Comments

Popular posts from this blog

எப்படி நான் மறப்பேன்

உம் அன்பு எத்தனை பெரிதையா இயேசையா உம் அன்பு பெரிதையா எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் உம் அன்பை 1.பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில் பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர் 2.தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்க்கையில் வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர் 3.துரோகி நான் உம்மையே பரிகாசம் செய்தேனே நேசமாய் வந்தென்னை சேர்த்து கொண்டீரே

அன்பின் நாயகனே

அன்பின் நாயகனே ஆறுதலின் ஊற்றே என்னை அழைத்தவர் நீர் அல்லவா உம்மை நேசிக்கிறேன் 1. அலைகள் படகை ஆழ்த்தும்போது காற்று பலமாய் அடிக்கும்போது படகு முழுகும் நிலை வரும்போது நம்பிக்கை எல்லாம் இழக்கும்போது 'பயப்படாதே நான் உன்னுடனே மகனே நான் உந்தன் அருகில் தானே  எந்தன் காவல் உனக்கல்லவா' என்ற அன்பை நான் மறப்பேனோ  2. எந்தன் வாழ்வின் தூயவனே வாழ்க்கை எல்லாம் உமக்கு தானே உம்மை விட்டு எங்கு செல்வேன் உந்தன் பின்னால் வருவேனே உந்தன் சித்தமே என் வாழ்வில் உந்தன் அழைப்பே என் மனதில் என்னையே என்றும் உமக்கென தந்த அன்பை நீர் மறப்பீரோ

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 3. தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா