Skip to main content

திருப்பாதம் சேராமல் இருப்பேனோ

தேவனின் பாதமண்டை சேராமல், அவரை தேடாமல் இருக்க கூடுமோ என பொருள்படும் பாடல் இது. தேவனின் இயல்புகளை எடுத்துரைக்கும் வரிகளும், அவர் இல்லாமல் புவியில் நமக்கு வேறு அடைக்கலம் இல்லை எனப் பொருள்படும் வரிகளும் அருமையானவை. நமக்கு ஆறுதலும் தேறுதலும் அளித்து மகிமையில் சேர்த்திடுபவர் இறைவன் என்னும் வரிகள் நம்பிக்கை ஊட்டுபவை.

திருப்பாதம் சேராமல் இருப்பேனோ - நான்
தெய்வத்தை தேடாமல் பிழைப்பேனோ

1.அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்
உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன் - திருப்பாதம்

2.ஆவியும் ஆன்மாவும் ஆண்டவர் பங்கே
பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே - திருப்பாதம்

3.ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்
தூறும் மகிமையில் சேர்த்திடும் தூயன் - திருப்பாதம்

4.உலையில் மெழுகுபோல் உருகுதென் நெஞ்சம்
அலையாகும் திருவடி வணங்கினேன் தஞ்சம் - திருப்பாதம்

Comments

Popular posts from this blog

நம்பி வந்தேன் மேசியா நான்

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே - திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பி வந்தேனே. தம்பிரான் ஒருவனே தஞ்சமே தருவனே - வரு தவீது குமார குரு பரமனுவேலே நம்பி வந்தேனே. நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் - நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பி வந்தேனே. நாதனே கிருபை கூர் வேதனே சிறுமை தீர் - அதி நலம் மிகும உனதிரு திருவடி அருளே நம்பி வந்தேனே. பாவியில் பாவியே கோவியில் கோவியே - கண பரிவுடன் அருள் புரி அகல விடாதே நம்பி வந்தேனே. ஆதி ஓலோலமே பாதுகா காலமே - உன தடிமைகள் படு துயர் மெத்த நம்பி வந்தேனே.

இனியும் உம்மை கேட்பேன்

இனியும் உம்மை கேட்பேன் நீர் சொல்வதை நான் செய்வேன் என் கூட பேசுங்கப் பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா- நீர் பேசாவிட்டா நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன் என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா -இனியும் நீர் பேசாவிட்டா நான் தளர்ந்துபோவே தள்ளாடிப்போவேன்- என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா -இனியும்

பிறர் வாழவேண்டுமெனில் நான் சாக வேண்டும்

பிறர் வாழவேண்டுமெனில் நான் சாக வேண்டும் நான் சாகவேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் – எனில் இயேசு தினம் வாழவேண்டும் 1. நான் என்னும் ஆணவத்தால் நாளெல்லாம் வாழ்ந்திருந்தேன் பிறர் வாழ்வை எண்ணாமல் பாதையிலே மயங்கி நின்றேன் இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் 2. மற்றவர்கள் மனம் மகிழ மன்னவனே நீ மரித்தாய் மற்றவர்கள் மனம் நோக மதியிழந்து நான் இருந்தேன் இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் 3. உலகுக்காய் நான் வாழ ஒரு மனது துடிக்கையிலே உள்ளுக்குள் கறைபட்ட மறுமனது மறுத்ததையா இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன்