Skip to main content

என் மீட்பர் இரத்தம் சிந்தினார்

என் மீட்பர் எனக்காய் இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தார். அவர் காட்டும் பாதை ஜீவ ஒளியும், அவரின் வார்த்தை ஜீவ ஊற்றுமாம். அவர் எனக்காய் ஜீவனை கொடுத்து என்றும் என்னோடு இருக்கிறவர். அவரை நாடுவதும் போற்றுவதுமே; என் வாழ்வின் நோக்கம்.

என் மீட்பர் இரத்தம் சிந்தினார்
நான் பரிசுத்தனானேன்
அவர் எனக்காய் மரித்தெழுந்தார்
நான் மறுரூபமானேன்

1.அவர் பாதை ஜீவ ஒளியாம்
என் இதயம் தேடுதே
அவர் வார்த்தை ஜீவ ஊற்றாம்
என் இதயம் நாடுதே

2.அவர் எனக்காய் உயிர் கொடுத்தார்
என் உள்ளம் போற்றுதே
அவர் என்னோடு என்றும் இருப்பார்
என் உள்ளம் வாழ்த்துதே

Comments

Popular posts from this blog

எப்படி நான் மறப்பேன்

உம் அன்பு எத்தனை பெரிதையா இயேசையா உம் அன்பு பெரிதையா எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் உம் அன்பை 1.பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில் பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர் 2.தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்க்கையில் வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர் 3.துரோகி நான் உம்மையே பரிகாசம் செய்தேனே நேசமாய் வந்தென்னை சேர்த்து கொண்டீரே

அன்பின் நாயகனே

அன்பின் நாயகனே ஆறுதலின் ஊற்றே என்னை அழைத்தவர் நீர் அல்லவா உம்மை நேசிக்கிறேன் 1. அலைகள் படகை ஆழ்த்தும்போது காற்று பலமாய் அடிக்கும்போது படகு முழுகும் நிலை வரும்போது நம்பிக்கை எல்லாம் இழக்கும்போது 'பயப்படாதே நான் உன்னுடனே மகனே நான் உந்தன் அருகில் தானே  எந்தன் காவல் உனக்கல்லவா' என்ற அன்பை நான் மறப்பேனோ  2. எந்தன் வாழ்வின் தூயவனே வாழ்க்கை எல்லாம் உமக்கு தானே உம்மை விட்டு எங்கு செல்வேன் உந்தன் பின்னால் வருவேனே உந்தன் சித்தமே என் வாழ்வில் உந்தன் அழைப்பே என் மனதில் என்னையே என்றும் உமக்கென தந்த அன்பை நீர் மறப்பீரோ

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 3. தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா