Skip to main content

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே

யோபுவின் வாழ்க்கையில் தேவன் செய்த நன்மைகளை மையமாக கொண்ட பாடல் இது. தேவன் முடிவெடுத்தால் அதை மாற்ற யாரால் கூடும். அவர் எனக்கென்று முன்குறித்துள்ள யாவற்றையும் நிறைவேற்றுவார். நம்மை தேவன் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கும் நாம் எம்மாத்திரம்? ஆனாலும் அவர் நம்மை காலைதோறும் நோக்கி பார்த்து நிமிடந்தோரும் விசாரிக்கிறாரே?

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா

1.நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்

2.நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்

3.என்னைப் புடமிட்டால் நான் பொன்னாக துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போல காத்துக் கொண்டேன்
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்

Comments

Popular posts from this blog

எப்படி நான் மறப்பேன்

உம் அன்பு எத்தனை பெரிதையா இயேசையா உம் அன்பு பெரிதையா எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் உம் அன்பை 1.பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில் பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர் 2.தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்க்கையில் வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர் 3.துரோகி நான் உம்மையே பரிகாசம் செய்தேனே நேசமாய் வந்தென்னை சேர்த்து கொண்டீரே

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் கிருபையால் இறங்கிடுமே தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 1) உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை அதை நீர் நன்றாய் அறிவீர் தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 2) என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன் அதை நீர் நன்றாய் அறிவீர் உம் பெலத்தால் எல்லாம் செய்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 3)சோதனைகள் தாங்க பெலனில்லை அதை நீர் நன்றாய் அறிவீர் சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க உம் கிருபையால் நினைத்திடுமே

அன்பின் நாயகனே

அன்பின் நாயகனே ஆறுதலின் ஊற்றே என்னை அழைத்தவர் நீர் அல்லவா உம்மை நேசிக்கிறேன் 1. அலைகள் படகை ஆழ்த்தும்போது காற்று பலமாய் அடிக்கும்போது படகு முழுகும் நிலை வரும்போது நம்பிக்கை எல்லாம் இழக்கும்போது 'பயப்படாதே நான் உன்னுடனே மகனே நான் உந்தன் அருகில் தானே  எந்தன் காவல் உனக்கல்லவா' என்ற அன்பை நான் மறப்பேனோ  2. எந்தன் வாழ்வின் தூயவனே வாழ்க்கை எல்லாம் உமக்கு தானே உம்மை விட்டு எங்கு செல்வேன் உந்தன் பின்னால் வருவேனே உந்தன் சித்தமே என் வாழ்வில் உந்தன் அழைப்பே என் மனதில் என்னையே என்றும் உமக்கென தந்த அன்பை நீர் மறப்பீரோ