Skip to main content

இதய துடிப்பை புரிந்து கொள்ள இதயம் இல்லையே

இதய துடிப்பை புரிந்து கொள்ள இதயம் இல்லையே
மனதின் உணர்வை உணர்ந்து கொள்ள மனிதர் இல்லையே
உலக ஓடையில் வாழ்க்கை படகு ஓட மறுக்குதே
ஓட்டைப் படகை ஒட்டிட எனக்கு ஒருவர் இல்லையே

எனக்காய் வாழ எனக்காய் மரிக்க எனக்கு யார் உண்டு
எனக்காய் மரித்து உயிர்த்து எழுந்த இயேசு தான் உண்டு

வாழ்க்கை மேடையில் ஊமை வேடம் எனக்கு பொருந்துமே
பாலை வனத்தில் கானல் நீரும் காணவில்லையே
எனது மனது வீணை மீட்க வித்துவான் இல்லையே
மனது வீட்டை மடக்க செய்ய மனதும் இல்லையே

கண்ணின் மணி போல் ஏற்று கொள்ள இமைகள் இல்லையே
பார்வை நாடகம் எனது வாழ்வில் வெளிச்சம் இல்லையே
உயர வானில் பறந்து செல்ல சிறகு இல்லையே
பூமி தன்னில் வாசம் செய்ய மனதும் இல்லையே

Comments

  1. Thanks bro...I was searching this song only, but not able to find out the mp3 version of this song...

    ReplyDelete
  2. Glad that this post helped you.. I could find a youtube video of this song.. Hope this helps.. http://www.youtube.com/watch?v=DvEcIqONamc

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நம்பி வந்தேன் மேசியா நான்

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே - திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பி வந்தேனே. தம்பிரான் ஒருவனே தஞ்சமே தருவனே - வரு தவீது குமார குரு பரமனுவேலே நம்பி வந்தேனே. நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் - நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பி வந்தேனே. நாதனே கிருபை கூர் வேதனே சிறுமை தீர் - அதி நலம் மிகும உனதிரு திருவடி அருளே நம்பி வந்தேனே. பாவியில் பாவியே கோவியில் கோவியே - கண பரிவுடன் அருள் புரி அகல விடாதே நம்பி வந்தேனே. ஆதி ஓலோலமே பாதுகா காலமே - உன தடிமைகள் படு துயர் மெத்த நம்பி வந்தேனே.

இனியும் உம்மை கேட்பேன்

இனியும் உம்மை கேட்பேன் நீர் சொல்வதை நான் செய்வேன் என் கூட பேசுங்கப் பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா- நீர் பேசாவிட்டா நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன் என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா -இனியும் நீர் பேசாவிட்டா நான் தளர்ந்துபோவே தள்ளாடிப்போவேன்- என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா -இனியும்

பிறர் வாழவேண்டுமெனில் நான் சாக வேண்டும்

பிறர் வாழவேண்டுமெனில் நான் சாக வேண்டும் நான் சாகவேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் – எனில் இயேசு தினம் வாழவேண்டும் 1. நான் என்னும் ஆணவத்தால் நாளெல்லாம் வாழ்ந்திருந்தேன் பிறர் வாழ்வை எண்ணாமல் பாதையிலே மயங்கி நின்றேன் இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் 2. மற்றவர்கள் மனம் மகிழ மன்னவனே நீ மரித்தாய் மற்றவர்கள் மனம் நோக மதியிழந்து நான் இருந்தேன் இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் 3. உலகுக்காய் நான் வாழ ஒரு மனது துடிக்கையிலே உள்ளுக்குள் கறைபட்ட மறுமனது மறுத்ததையா இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன்