Skip to main content

ஆதி திரு வார்த்தை

ஆதி திரு வார்த்தை திவ்விய
அற்புத பாலனாகப் பிறந்தார்
ஆதந்தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட
ஆதிரையோரை யீடேற்றிட

மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து
மரியக் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார் ரஞ்சிதனார்

தாம் தாம் தன்னர வன்னர
தீம் தீம் தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

1.ஆதாம் ஓதி ஏவினர்
ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத் தாளுகை செங்கோல்
ஈசாய் வங்கிஷத் தானுதித்தார்

2.பூலோகப் பாவ விமோசனர்
பூரணக் கிருபையின் வாசனர்
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார்

3.அல்லேலூயா! சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீக்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்

Comments

Popular posts from this blog

நம்பி வந்தேன் மேசியா நான்

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே - திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பி வந்தேனே. தம்பிரான் ஒருவனே தஞ்சமே தருவனே - வரு தவீது குமார குரு பரமனுவேலே நம்பி வந்தேனே. நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் - நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பி வந்தேனே. நாதனே கிருபை கூர் வேதனே சிறுமை தீர் - அதி நலம் மிகும உனதிரு திருவடி அருளே நம்பி வந்தேனே. பாவியில் பாவியே கோவியில் கோவியே - கண பரிவுடன் அருள் புரி அகல விடாதே நம்பி வந்தேனே. ஆதி ஓலோலமே பாதுகா காலமே - உன தடிமைகள் படு துயர் மெத்த நம்பி வந்தேனே.

இனியும் உம்மை கேட்பேன்

இனியும் உம்மை கேட்பேன் நீர் சொல்வதை நான் செய்வேன் என் கூட பேசுங்கப் பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா- நீர் பேசாவிட்டா நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன் என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா -இனியும் நீர் பேசாவிட்டா நான் தளர்ந்துபோவே தள்ளாடிப்போவேன்- என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா -இனியும்

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்

என் நிலைமை நன்றாய் அறிந்தவர் பாவி என்னை அழைத்தவர் மீறின பின்பும் வெறுக்காதவர் உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை நேசித்தவரில் இது போல் அன்பை இன்னும் காணவில்லை விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை உம் அன்பை மட்டும் என்னவென்று சொல்ல தெரியவில்லை தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே உம் அன்பில் ஒன்றே உண்மை உண்டென்று கண்டேன்