Skip to main content

என்னில் என்ன கண்டீர்

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப்பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ் ஏழைக்கு தகுதி இல்லையே

என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் – என்னில்

1. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் – என்னில்

2. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே
உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே – என்னில்

Comments

Popular posts from this blog

நம்பி வந்தேன் மேசியா நான்

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே - திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பி வந்தேனே. தம்பிரான் ஒருவனே தஞ்சமே தருவனே - வரு தவீது குமார குரு பரமனுவேலே நம்பி வந்தேனே. நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் - நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பி வந்தேனே. நாதனே கிருபை கூர் வேதனே சிறுமை தீர் - அதி நலம் மிகும உனதிரு திருவடி அருளே நம்பி வந்தேனே. பாவியில் பாவியே கோவியில் கோவியே - கண பரிவுடன் அருள் புரி அகல விடாதே நம்பி வந்தேனே. ஆதி ஓலோலமே பாதுகா காலமே - உன தடிமைகள் படு துயர் மெத்த நம்பி வந்தேனே.

இனியும் உம்மை கேட்பேன்

இனியும் உம்மை கேட்பேன் நீர் சொல்வதை நான் செய்வேன் என் கூட பேசுங்கப் பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா- நீர் பேசாவிட்டா நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன் என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா -இனியும் நீர் பேசாவிட்டா நான் தளர்ந்துபோவே தள்ளாடிப்போவேன்- என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா -இனியும்

பிறர் வாழவேண்டுமெனில் நான் சாக வேண்டும்

பிறர் வாழவேண்டுமெனில் நான் சாக வேண்டும் நான் சாகவேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் – எனில் இயேசு தினம் வாழவேண்டும் 1. நான் என்னும் ஆணவத்தால் நாளெல்லாம் வாழ்ந்திருந்தேன் பிறர் வாழ்வை எண்ணாமல் பாதையிலே மயங்கி நின்றேன் இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் 2. மற்றவர்கள் மனம் மகிழ மன்னவனே நீ மரித்தாய் மற்றவர்கள் மனம் நோக மதியிழந்து நான் இருந்தேன் இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் 3. உலகுக்காய் நான் வாழ ஒரு மனது துடிக்கையிலே உள்ளுக்குள் கறைபட்ட மறுமனது மறுத்ததையா இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன்