Skip to main content

Posts

ஏசுவையே துதி செய்

ஏசுவையே துதி செய், நீ மனமே ஏசுவையே துதி செய் 1.மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து 2.அந்தரவான் தரையுந்தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் 3.எண்ணின காரியம் யாவு முகிக்க மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க

ஆதி திரு வார்த்தை

ஆதி திரு வார்த்தை திவ்விய அற்புத பாலனாகப் பிறந்தார் ஆதந்தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட ஆதிரையோரை யீடேற்றிட மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து மரியக் கன்னியிட முதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனுக்குமாரன் வேஷமாய் உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மைச் சொரூபனார் ரஞ்சிதனார் தாம் தாம் தன்னர வன்னர தீம் தீம் தீமையகற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ ஷமென சோபனம் பாடவே இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட 1.ஆதாம் ஓதி ஏவினர் ஆபிரகாம் விசுவாசவித்து யூதர் சிம்மாசனத் தாளுகை செங்கோல் ஈசாய் வங்கிஷத் தானுதித்தார் 2.பூலோகப் பாவ விமோசனர் பூரணக் கிருபையின் வாசனர் மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன் மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் 3.அல்லேலூயா! சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீக்கிட அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்

சோர்ந்து போகாதே மனமே

சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே கண்டுனை அழைத்த தேவன் கைவிடுவாரோ 1.வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு ஊக்கமான ஆவி உன்னைத் தாங்க மன்றாடு 2.துன்பங்கள் தொல்லைகள் உன்னைச் சூழ்ந்து கொண்டாலும் அன்பர் உன்னைத் தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ 3.சோதனைகளை ஜெயிப்பேன் பாக்கியவானல்லோ ஜீவகிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம் – சோர்ந்து

உமக்காக வாழணுமே

உமக்காக வாழணுமே என் இயேசுவே என் நேசரே - என்றும் உமக்காக வாழணுமே 1.என் ஆசை எல்லாம் நீர்தான் ஐயா என் ஏக்கம் எல்லாம் நீர்தான் ஐயா எனக்கொன்றும் வேண்டாம் இவ்வுலகில் உம் திருமார்பில் சாய்ந்திடுவேன் 2.என் பொருள் எல்லாம் உமக்கே ஐயா என் வாழ்க்கை எல்லாம் உமக்கே ஐயா நீர் போதும் எனக்கு இவ்வுலகில் உம் திருப்பாதம் அர்ப்பணித்தேன்

இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே இயேசு அழைக்கிறார் 1.எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார் என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் 2.கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார் கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும் கருத்துடன் உன்னைக் காத்திடவே 3.சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார் அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால் தாமதமின்றி நீ வந்திடுவாய் 4.சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம் யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே கிருபையாய் அன்பை அளித்திடவே

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே 1.கெத்செமனே பூங்காவினில் கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே - கல்வாரி 2.சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போதும் அவர்க்காய் வேண்டினீரே அன்போடு அவர்களை கண்டீரன்றோ அன்பே உம் அன்பு பெரிதே - கல்வாரி 3.என்னையும் உம்மைப் போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ என் தலை தரை மட்டும் தாழ்த்துகிறேன் தந்து விட்டேன் அன்பு கரங்களிலே ஏற்று என்றும் நடத்தும் - கல்வாரி

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே 1.என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர், என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்; விண்ணுல குயர்ந்தோர் , உன்னதஞ்சிறந்தோர், மித்திரனே சுகபத்திர மருளும் - என் மீட்பர் 2.பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ, பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர், சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்; சஞ்சலமினியேன் ? நெஞ்சமே, மகிழாய் - என் மீட்பர் 3.ஆசி செய்திடுவார், அருள்மிக அளிப்பார், அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்; மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்; மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் - என் மீட்பர் 4.கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார், கடைசிமட்டுங் கைவிடா திருப்பார்; பாவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார், பரம பதவியினுள் என்றனை எடுப்பார் - என் மீட்பர் 5.போனது போகட்டும், புவிவசை பேசட்டும், பொல்லான் அம்புக ளெய்திடட்டும், ஆனது ஆகட்டும், அருள்மழை பெய்திடும், அன்புமிகும் பேரின்ப மெனக்கருள் - என் மீட்பர்