Skip to main content

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு

எந்த சூழ்நிலையில் நாம் இருந்தாலும் ஆண்டவர் நம்மை மீட்க வல்லவர் என்னும் பொருள் கொண்ட பாடல் இது. சோதனை வரும் நேரத்தில் பரத்திலிருந்து ஜெயம் நம் செவிதனில் ஒலிக்கும் என்னும் வரி துன்ப காலத்தில் நம்மை பலப்படுத்துவதாக உள்ளது. என்ன வந்தாலும் என் மீட்பரை நம்புவேன், யார் கைவிட்டாலும் அவரை நான் பின்பற்றுவேன் என்னும் பொருள் படும் வரிகள் நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் என்னைக் காக்க வல்லோர்

  காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
  உண்டெனக்கு உண்டெனக்கு
  காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
  காத்திடுவார் என்றுமே

ஐயமிருந்ததோர் காலத்தில்
ஆவிக் குறைவால் தான்
மீட்பர் உதிர பெலத்தால்
சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே
இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று
இயேசென்னைக் காக்க வல்லோர்

என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன்
எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் அவர்
என்னைக் கைவிடமாட்டார்

Comments

Popular posts from this blog

எப்படி நான் மறப்பேன்

உம் அன்பு எத்தனை பெரிதையா இயேசையா உம் அன்பு பெரிதையா எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் உம் அன்பை 1.பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில் பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர் 2.தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்க்கையில் வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர் 3.துரோகி நான் உம்மையே பரிகாசம் செய்தேனே நேசமாய் வந்தென்னை சேர்த்து கொண்டீரே

அன்பின் நாயகனே

அன்பின் நாயகனே ஆறுதலின் ஊற்றே என்னை அழைத்தவர் நீர் அல்லவா உம்மை நேசிக்கிறேன் 1. அலைகள் படகை ஆழ்த்தும்போது காற்று பலமாய் அடிக்கும்போது படகு முழுகும் நிலை வரும்போது நம்பிக்கை எல்லாம் இழக்கும்போது 'பயப்படாதே நான் உன்னுடனே மகனே நான் உந்தன் அருகில் தானே  எந்தன் காவல் உனக்கல்லவா' என்ற அன்பை நான் மறப்பேனோ  2. எந்தன் வாழ்வின் தூயவனே வாழ்க்கை எல்லாம் உமக்கு தானே உம்மை விட்டு எங்கு செல்வேன் உந்தன் பின்னால் வருவேனே உந்தன் சித்தமே என் வாழ்வில் உந்தன் அழைப்பே என் மனதில் என்னையே என்றும் உமக்கென தந்த அன்பை நீர் மறப்பீரோ

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் கிருபையால் இறங்கிடுமே தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 1) உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை அதை நீர் நன்றாய் அறிவீர் தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 2) என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன் அதை நீர் நன்றாய் அறிவீர் உம் பெலத்தால் எல்லாம் செய்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 3)சோதனைகள் தாங்க பெலனில்லை அதை நீர் நன்றாய் அறிவீர் சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க உம் கிருபையால் நினைத்திடுமே